திமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாக ஒரு செய்தி பரவும் நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மறுத்தார். இருப்பினும் பாமக முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்ததால் அவர்கள் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்க போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவனிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டபோது பாமக கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறோம் என்று கூறினார். அதாவது பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஏற்கனவே திருமாவளவன் கூறிய நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையே மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் திருமாவளவன் விலகலாம் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கருத்து பரவி வருகிறது. இதனால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் இது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து பேசிய திருமாவளவன் பாகிஸ்தான் மற்றும் இந்தியா போர் நிறுத்தத்தை இரு நாடுகளில் யாராவது ஒருவர் அறிவித்திருக்க வேண்டும் எதற்காக டிரம்ப் வந்து அறிவித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அண்ணாமலை ஒரு நாட்டையே அழிக்க வேண்டும் என்று கூறியது தவறு. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும். மற்றபடி போர் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து. அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது என்று கூறினார்.