தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் சந்தானம். இவர் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். நடிகர் ஆர்யா டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெற்றி பெற்றால் நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தையும் தயாரிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் பேசினார். அவர் பேசியதாவது, காமெடியனாக இருக்கும்போது நீயாக இருந்துவிட்டு ஹீரோவாக நடிக்கும்போது ஏன் இப்படி மாறிவிட்டாய் என நடிகர் ஆர்யா கேட்டதாகவும் ஆனால் தற்போது நடித்துள்ள இந்த படத்தில் பழைய காமெடி கதாபாத்திரத்தை இயக்குனர் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் அடுத்த கிறிஸ்டோபர் நோலன் என்றும் சந்தானம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கோவிந்தா பாடலை நான் கிண்டல் செய்யவில்லை.
நான் எப்போதும் கடவுள்களை கிண்டல் செய்ய மாட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதால் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே செல்வேன். எனக்காக நிறைய ஹீரோ படங்கள் வெய்ட்டிங்கில் இருக்கும் நிலையில் இனியும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்றால் அதற்காக நான் ஒரு புது ஸ்டைலை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நான் என்னுடைய நண்பன் சிம்புக்காக மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் அவருடைய படத்தில் நடிக்க இருக்கிறேன். அதேபோன்று நண்பன் உதயநிதி அழைத்தால் எனக்கும் சில விஷயங்கள் செட்டானால் கண்டிப்பாக அவருக்காக அடுத்து வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று கூறினார். மேலும் ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வைகைப்புயல் வடிவேலு இருக்கும் நிலையின் தற்போது நடிகர் சந்தானமும் உதயநிதிக்காக பிரச்சாரம் செய்வேன் என கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.