மியான்மரில் கிளர்ச்சி படை கட்டுப்பாட்டில் இருந்த பள்ளி மீது சொந்த நாட்டு ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சொந்த நாட்டு ராணுவமே பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதில் 22 அப்பாவி குழந்தைகள் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 24 பேர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது.
அப்போது இருந்தே ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளியின் மீது ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.