தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.
2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு இளைஞர்கள் பிட்டாக இருப்பது எப்படி என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இளம் வயதில் தான் எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இரவு நேரத்தில் அதிக ஹெவியான உணவை தவிர்த்து விடுங்கள் லைட்டான உணவை சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே தூங்க சென்று விடுங்கள். இது ஒன்றை கடைபிடித்தால் பின்னாளில் உடல் பருமனால் பாதிக்கப்பட வேண்டி இருக்காது அதை குறைக்க வேண்டும் என்று வருத்தப்பட வேண்டி இருக்காது என்று பகிர்ந்திருக்கிறார் சிம்பு.