தமிழ்த்திரை உலகின் மாடர்ன் ஜோதிடர், நயாகரான்னா யாரு தெரியுமா? ஊர்வசி சொல்றதைக் கேளுங்க!
Tamil Minutes May 13, 2025 01:48 PM
oorvasi

தமிழ்திரை உலகில் சகலகலாவல்லவன் நடிகர் யாருன்னு கேட்டா டக்குன்னு கமலைச் சொல்லி விடலாம். அவரு தான் சினிமாவை அக்கு வேறு ஆணி வேராகத் தெரிந்து வைத்துள்ளார். இப்போது வரை அதன் அப்டேட் தெரிந்து வைத்துள்ளார். தற்போது கூட ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிக்க அமெரிக்கா சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. கலைஞானி கமலைப் பற்றி நடிப்பு ராட்சசின்னு கமலால் பாராட்டப்பட்ட நடிகை ஊர்வசி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

கமல்ஹாசனை ஒரு மார்டன் ஜோதிடர் என்றுதான் நான் சொல்வேன். அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதை இப்போதே கணிக்கக்கூடியவர் தான் கமல். யாருடைய மனதையும் புண்படுத்தாத மாதிரிதான் அவர் நாத்திகத்தையே பேசுவார்.

கடவுள் இருந்தா நல்லாருக்கும்னு சொல்வார். அதுக்கு என்ன பதில் சொல்வது? அவருக்குக் காலில் அடிபட்ட போது அவரைப் பார்க்க நான் போயிருந்தேன். உடம்பைக் கவனமா பார்த்துக்கங்க கமல்ஜி. கடவுள்கிட்ட வேண்டிக்கோங்கன்னு சொன்னேன். ஆமாமா கடவுள்கிட்ட வேண்டிக்கோங்கங்கன்னு எங்கிட்ட சொன்னாரு அவரு. கமல் சாரிடம் சினிமா மட்டுமல்ல.

kamal

புராணம், இலக்கியம்னு எதைப் பத்தி வேணாலும் கேள்வி கேட்கலாம். தெரியாதுன்னே சொல்ல மாட்டாரு. எல்லாத்துக்கும் விரல் நுனியிலே பதில் வைத்திருப்பார். நயகராவின் அருமை அருகில் உள்ளவர்களுக்குத் தெரியாதுன்னு சொல்வாங்க.

அதுமாதிரி தான் கமலும். அவர் நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்குறதனாலதான் நயகரா மாதிரி அவரோட பெருமையும் நமக்குத் தெரியல என்று ஒரு கட்டுரையிலே நடிகை ஊர்வசி பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.