சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!
Tamil Minutes May 13, 2025 02:48 PM

 

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவும் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் 2025 தொடரை மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தரம்சாலா போட்டி ரத்து செய்யப்பட்டது.

முதலில் மே 26ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதிப் போட்டி இப்போது ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 போட்டிகள் டெல்லி, லக்னோ, மும்பை, ஜெய்ப்பூர், பெங்களூர் மற்றும் அஹமதாபாத் நகரங்களில் நடைபெறும். ஆனால் பிளேஆஃப் சுற்றுக்கான மைதானங்களை பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் இந்த சீசனில் இனி சென்னையில் போட்டியில்லை. சென்னையில் நடைபெற இருந்த ஒரு போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டது.

ஐபிஎல் தேதி மாற்றம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), TATA IPL 2025 தொடரை மீண்டும் தொடங்குவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுடன் விரிவான ஆலோசனைகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, தொடரின் மீதமுள்ள பகுதிகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 17 போட்டிகள், 6 மைதானங்களில், மே 17 முதல் ஜூன் 3 வரை நடைபெறவுள்ளன. மாற்றப்பட்ட அட்டவணையில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஞாயிறு மட்டும் நடைபெறும்.”

ஐபிஎல் 2025 பிளேஆஃப்ஸ் அட்டவணை:

குவாலிபையர் 1 – மே 29

எலிமினேட்டர் – மே 30

குவாலிபையர் 2 – ஜூன் 1

இறுதி போட்டி – ஜூன் 3

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டி மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளைத் தவிர மற்ற அனைத்து ஏழு அணிகளும் இன்னும் பிளேஆஃப்ஸ் வாய்ப்புக்காக போட்டியிடுகின்றன. தொடரின் மீண்டும் தொடக்கப்போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும்.

ஐபிஎல் 2025 மீதமுள்ள போட்டிகளின் புதிய அட்டவணை இதோ:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.