இந்த 3 வீரர்களும் 9 சுற்றுகளுக்குப் பிறகு 5.5 புள்ளிகளுடன் பிரதான போட்டியை முடித்திருந்தனர். இதனால் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கர்களில் வச்சியர்-லக்ரேவ் மற்றும் அலிரேசா ஃபிரூஸ்ஜாவுடன் பிரக்ஞானந்தா மோதினார். பிரக்ஞானந்தா vs ஃபிரூஸ்ஜா மற்றும் வச்சியர்-லக்ரேவ் vs ஃபிரூஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதனையடுத்து நடைபெற்ற இறுதி சுற்றில் வச்சியர்-லக்ரேவை தோற்கடித்து பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரக்ஞானந்தா இந்த தொடரில் 9 ஆட்டங்களில் 7 ஆட்டங்களை டிரா செய்தார். டை பிரேக்கரில் கூடுதல் கவனம் செலுத்தியதால் அவரால் கோப்பையை வெல்ல முடிந்ததாக கூறியுள்ளார். கோப்பையை வென்ற அவருக்கு ரூ.66 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.குகேஷ், ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தை டிரா செய்த பிறகு, 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் டி.குகேஷ்க்கு ரூ.14 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி வருகிறார். ஏற்கனவே பிப்ரவரி மாதம் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். உலக சாம்பியன் குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். தற்போது சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரிலும் அவர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.