8 மாத கால இடைவெளியில் 42 கிலோ எடையைக் குறைத்தேன்..2024 ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு இதைக் குறைத்தேன். நான் ஒரு டீடோட்டலராகவும் சைவ உணவை உண்பவராகவும் மாறிவிட்டேன். ரேஸிங்கிற்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். ரேஸிங்கிற்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார்.
எனது படங்களில் சண்டையிடுவதும் நான்தான். அதிலும் காயம் ஏற்படுகிறது. அதனால் ஆக்ஷன் படங்களில் நடிக்காமல் இருக்க மாட்டேன். அதேபோலதான் ரேஸிங்கிற்கும் உடலும் உள்ளமும் அதிகமான ஈடுபாடு தேவைப்படுகிறது. அதனால், இதில் காயம் ஏற்படுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” எனக் கூறியுள்ளார்.