“விசிகவுடன் சினிமா ஸ்டார் கூட போட்டி போட முடியாது”… தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய திருமா…!!!
SeithiSolai Tamil May 18, 2025 04:48 AM

திருச்சி மாவட்டத்தில் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் எழுத்து பேரணி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, விசிக சார்பாக நடத்தப்படும் மாநாட்டின் பெயர்களுக்கு பொருள் உள்ளது, பல்வேறு கருத்துக்கள் உள்ளது.

எந்த கட்சிகளும் இப்படி மாநாடு நடத்தியதில்லை. எல்லா தொகுதிகளிலும் இந்துக்களின் வாக்குகளை விட முஸ்லிம்களின் வாக்குகள் குறைவு வாக்கு வங்கிக்காக, தேர்தல் அரசியலுக்காகவும் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற கூறவில்லை.

விசிகவிற்கு தேர்தல் தாண்டி ஒரு சில கோட்பாடுகள் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாக்க வேண்டும். சினிமா ஸ்டார் ஆக இருந்தால் கூட விசிகவிற்கு போட்டியாக வர முடியாது. இதில் திருமாவளவன் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. வேங்கை வயல் குறித்து ஏன் பெரிய அளவில் திருமாவளவன் பேசவில்லை, போராட்டம் செய்யவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

அதிமுக கூட வேங்கைவயல் குறித்து பெரிய அளவில் போராட்டம் செய்யவில்லை. பாஜகவோடும், பாமகவோடும் எப்போதும் உறவு இல்லை. வன்னிய சமூகத்தினரோடு எங்களுக்கு உறவு உண்டு என்று தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.