மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Dhinasari Tamil May 18, 2025 04:48 AM

#featured_image %name%

திருப்பரங்குன்றம் பகுதியில், நடிகர் சூரியின் ரசிகர் மன்ற கொடி பால்குடம், ட்ரம் செட் உடன் மாமன் திரைப்பட திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

மதுரையில் பிறந்து திரையுலகில் வளர்ச்சி பெற்று கதாநாயகனாக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரிக்கு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ராஜ்கிரன் ஐஸ்வர்ய லட்சுமி உடன் நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை ஒட்டி, மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.

திருநகரில் உள்ள கலைவாணி திரையரங்கு வாசலில் நடிகர் சூரியின் பிளக் யிற்கு பெண் ரசிகைகள் கொண்டு வந்த பால் குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களை தூவி தங்கள் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நான்கு படம் முடிந்து ஐந்தாவது படம் கதாநாயகன் நடித்த நிலையில், அகில இந்திய சூரி தலைமை ரசிகர் மன்றம் கொடியுடன் ஊர்வலமாக வந்தது பேசும் பொருளாகியுள்ளது .நடிகர் சூரி தனக்காக ஏதோ அடித்தளம் அமைக்கிறார் என, பரவலாக பொதுமக்கள் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.