“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!
SeithiSolai Tamil May 17, 2025 10:48 PM

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது அந்தப் பெண்ணை பின்னால் இருந்து பிடித்த அவர் தள்ளிக் கொண்டே கழிவறையை நோக்கி சென்றுள்ளார்.

இதனால் அந்தப் பெண் பாதிப்புக்குள்ளான நிலையில் விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் வைத்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் வாலிபர் நடந்த அனைத்தையும் உண்மையென ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.