வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. விஜயின் தமிழக வெற்றிக்கலகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. இதனால் தமிழக வெற்றி கழகத்துடன் எந்த கட்சிக் கூட்டணி வைக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக கூறினார். அதிமுக, பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்காது. பாஜக தங்களின் கொள்கை எதிரி என அவர் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, கூட்டணி இல்லை என விஜய் சொல்லட்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழகம் சார்பாக விஜயிடம் இருந்து எந்த வித அதிகாரப்பூர் அறிவிப்பும் வரவில்லை.
யார் யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்பது எனது கருத்து. கூட்டணிக்கு யாரிடம் பேசுவது, எப்படி பேசுவது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும் எனக் கூறியுள்ளார்.