“நடிகை ராஷ்மிகாவுடன் காதலா”..? அவருடன் நிறைய படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன்… ஓபனாக பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா…!!!
SeithiSolai Tamil May 18, 2025 09:48 PM

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா. கடந்த 2018 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் படமான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘டியர் காம்ரேட்’ என்ற திரைப்படத்திலும் நடித்தனர். அப்போதிலிருந்து இவர்கள் இருவரை குறித்தும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவத் தொடங்கியது.

இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் நடிகை ராஸ்மிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். இது குறித்து அவரிடம் ரஷ்மிகாவுடன் காதலா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் நடிகை ராஷ்மிகாவுடன் குறைவான படங்களில் தான் நடித்துள்ளேன். நான் இன்னும் நிறைய படங்களில் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகை என்று தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.