பொண்ணு பார்த்தாச்சு... இன்னும் 4 மாசம் தான் கல்யாணம் ... நடிகர் விஷால் பளிச் !
Dinamaalai May 18, 2025 09:48 PM

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை நிகழ்வில் விஷால்  சிறப்பு விருந்தினராக   கலந்துகொண்டார். அப்போது உடல் நலக்குறைபாடு காரணமாக திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். 


அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.  


இந்நிலையில் விஷால் தற்போது தன்னுடைய திருமணம் குறித்து  “நடிகர் சங்கக் கட்டிடத்தை ஆகஸ்ட் மாதத்தில் திறப்போம். அதன்பின்னர் எனக்குத் திருமணம் நடக்கும். பெண் பார்த்து பேசி முடிச்சாச்சு. இன்னும் நான்கு மாதத்தில் எனக்குத் திருமணம் உறுதி” எனக் கூறியுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.