ஐபிஎல் 2025: “11 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் சாதித்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ்… வேற லெவல்..!!!
SeithiSolai Tamil May 19, 2025 02:48 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வதேரா 70 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக துருவ் ஜூரேல் 50 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதனால் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானனை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 3-ம் இடத்திற்கு முன்னேறிய நிலையில் பிளே ஆப் சுற்றிற்கும் தொகுதி பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு அந்த அணி பிளே ஆப் கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.