சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. விலங்குகள் குழந்தைகள் குறித்த வீடியோ பொதுவாக வேகமாக வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த வீடியோவில் ஒரு குழந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த குரங்கு உணவை பறித்துக் கொண்டது. அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில் தந்தை குழந்தைக்கு உதவி செய்யாமல் அதனை வீடியோவாக படம் பிடித்து கொண்டிருந்தார். குழந்தையின் அருகில் இருந்த ஒரு பெண்மணி குழந்தை அழுகிறது உதவுங்கள் என சொல்கிறார்.எதையும் காதில் வாங்காமல் அந்த தந்தையோ அப்படியே உட்காருங்க எனக் கூறிவிட்டு படம் எடுக்கிறார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் குழந்தை அழுது கொண்டிருக்க பக்கத்திலிருந்து குரங்கு ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த தந்தை உதவி செய்யாமல் அதனை வீடியோ எடுத்த நிலையில் ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் தந்தைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஏற்படும் புகழுக்காக குழந்தையின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவது சரியல்ல எனப் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.