நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ள தயாராக இருங்க... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
Dinamaalai May 19, 2025 10:48 PM

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ளவும், பருவமழையை எதிர்கொள்ளயும் தயாராக இருக்க வேண்டும்.  என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பெய்யும் மழை, பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

பேரிடர் மீட்பு மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.