தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெற்றோர், திருவண்ணாமலை கிரிவலம் சென்ற நேரத்தில் சிறுமியை வீடு புகுந்து கற்பழித்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, விடுமுறையில் வீட்டில் உள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் இருவரும் கடந்த பதினொன்றாம் தேதி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலை சென்று விட்டனர். மகளும் மகனும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவு அதே ஊரைச் சேர்ந்த ஓட்டுநராக வேலை செய்யும், நவீன் குமார் (25) என்ற இளைஞர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். கதவைத் திறந்து என்ன ஏது எனக் கேட்டுள்ளனர். அப்பா அம்மா கோவிலுக்கு சென்று உள்ளார்கள், தம்பி உறங்கி விட்டான் என தெரிவித்துள்ளார். வீடு புகுந்து கற்பழித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி, நேற்று இரவு கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி செய்து கொண்டு தொடர்ந்து மேல்சிகிச்சிக்காக தருமபுரி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக இன்று விசாரித்த போது, நடந்தவற்றை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏரியூர் காவல் துறையினர் நவீன் குமாரை போஸ்கோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.