அடேங்கப்பா… சீனாவில் நாய்களுக்கு என்று உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி மையம்… நீச்சல் குளம், மசாஜ் அறை வசதிகள்….!!!
SeithiSolai Tamil May 21, 2025 02:48 AM

சீனா கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக அளவில் முன்னணியில் வலுவாக மாறியுள்ளது. இந்நிலையில் சீனாவில் முதன்முறையாக நாய்களுக்கு என்று பிரத்தியோக உடற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாய்களை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள Go Go Jim என்ற இந்த உடற்பயிற்சி மையத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரேட் மில், நீச்சல் குளம், மசாஜ் அறைகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. வரும் ஜூன் மாதத்தில் இந்த உடற்பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான Trail வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.