“இந்தியாவை அவங்கதான் அழிக்கிறாங்க”… செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
SeithiSolai Tamil May 21, 2025 05:48 PM

கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் எம்எல்ஏக்கள் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவு எடுக்கும் . இது கொள்கை ரீதியான முடிவுகள். அவரின் ஆசையை அவர் கூறியுள்ளார்.

இது கட்சியின் கருத்து அல்ல, கட்சி முடிவெடுக்கும் என்று கூறினார். இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டும். பாஜக கீழிருந்து மேல் வரை அனைத்தையும் கைப்பற்றியுள்ளது. எங்கள் தலைவர்கள் யாரும் பாஜகவை உயர்த்தி பிடிக்கும் தலைவர்கள் கிடையாது. இந்த நாட்டை அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறது என்றால் அது பாஜக தான். அங்கு பாசிச ஆட்சி நடக்கிறது என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.