தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அஜித்குமார் தான் கார் ரேசிங்கை தேர்ந்தெடுத்தது எப்படி என்பதை பற்றி பகிர்ந்திருக்கிறார். அஜித்குமார் கூறியது என்னவென்றால், நான் இளம் வயதில் கார் ரேசிங்கை தேர்ந்தெடுத்த போது அது மிகவும் மலிவானதாக இருந்தது. என் பெற்றோர்களும் ஆதரவு அளித்தார்கள். அதற்குப் பிறகு என்னுடைய அப்பா என்னை அழைத்து கார் ரேசிங்கிற்கு போகப் போக நிறைய செலவாகும் அதை உன் அம்மா அப்பாவால் செலவுகளை ஈடு கட்ட முடியாமல் போகலாம். உனக்கான ஸ்பான்சர்களை தேர்ந்தெடுத்து கார் ரேசிங்கில் முன்னேறுவது உன்னுடைய பொறுப்பு என்று கூறினார் என்று பகிர்ந்து இருக்கிறார் அஜித்குமார்.