லப்பர் பந்து படம் மூலமா எனக்கு இதுதான் கிடைச்சது… மனம் திறந்த நடிகை ஸ்வாசிகா…
Tamil Minutes May 21, 2025 06:48 PM

ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.

2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்வாசிகா பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், லப்பர் பந்து திரைப்படம் எனது வாழ்க்கையில் முக்கியமான படம். அந்த படத்தை பார்த்துவிட்டு சங்கர் சார் மற்றும் பல முக்கிய இயக்குனர்கள் என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள். எனக்கு அதுவே பெரிய விருது கிடைத்த மாதிரி இருந்தது. அந்த படம் எனக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. அதேபோல் தற்போது மாமன் படத்திற்கும் மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிர்ந்துள்ளார் ஸ்வாசிகா.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.