செம...இந்தியாவிலேயே 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம் இது தான்!
Dinamaalai May 23, 2025 01:48 AM


இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம்  அறியப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  அம்மாநில முதலமைச்சர் லால்டுஹோமோ அறிவித்துள்ளார். மிசோரமில்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் மாநில முதல்வர் இதனை தெரிவித்துள்ளார்.  


2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதம் மட்டுமே.  அப்போது மிசோரம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட 3வது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.