Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
அருணும், சீதாவும் கோயிலில் பேசிக்கொண்டு இருக்க அந்த நேரத்தில் சரியாக கோயிலுக்குள் வருகிறார்கள் மீனா மற்றும் முத்து. இருவரும் உள்ளே செல்வதற்கு முன் அருணும், முத்துவும் பார்த்து முட்டிக்கொள்கின்றனர். இவர் என்ன இங்க இருக்காரு என யோசிக்கின்றனர்.
பின்னர் வரும் அருண், சீதாவிடம் என்ன சஸ்பெண்ட் செஞ்ச ஒருத்தன் சொன்னேன்ல. அவன் இங்க வந்து இருக்கான் எனக் கூற வெளியில் செல்லலாம் என்கிறார். முத்துவும், மீனாவிடம் அந்த கான்ஸ்டபிள் இங்க இருக்கான் என அழுத்துக்கொள்கிறார்.
இதையடுத்து, சீதாவை பார்த்தப்படியே மீனா போக அவரும் அருணை அழைக்க முத்து வர என இருவரும் சரியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். முறைத்துக்கொண்டே நிற்க சீதா இவருக்கு தெரிஞ்ச ஒரு பொறுக்கி இங்கு வந்திருப்பதால் ஹோட்டல் போகலாமா என்கிறார்.
முத்து முறைத்துக்கொண்டே நிற்க ஒரு கட்டத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார். சீதா என்ன ஆச்சு எனக் கேட்க அவருக்கு பிடிக்காத பொறுக்கி உங்க மாமா தான் என சென்று விட பின்னர் வந்து சீதாவையும் அழைச்சிட்டு போகிறார்.
மீனாவின் அம்மாவிடம் வரும் முத்து, சீதா ஒரு மோசமான போலீஸை காதலிக்கிறாள். அது சரியா இருக்காது. நான் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்க்கிறேன் எனக் கூறி செல்கிறார். பின்னர் வரும் மீனா மற்றும் சீதாவை பார்த்து அவர் அம்மா கோபப்படுகிறார்.
சீதாவை அடிக்க மீனா மற்றும் சத்யா தடுக்க செல்கின்றனர். மீனா உள்ளே வந்து அவரு நல்லவரா இருக்கலாம் அம்மா எனக் கூற நீ இப்படி சொல்ற மாப்பிள்ளை அவருக்கு புத்தி சரியில்லை என்கிறாரே. இருந்தாலும் சீதா காதலிச்சு இருக்கிறாள் என மீனா சொல்கிறார்.
மீனா அம்மா இருந்தாலும் மாப்பிள்ளைக்கு பிடிச்சி இருக்கணும். அவர் ஓகே சொன்னால் தான் எல்லாமே என்கிறார். இதையடுத்து மீனா நான் அவரை சமாளிக்கிறேன் எனக் கூறி சீதாவை ரூமுக்கு அழைத்து செல்கிறார். சீதா எனக்கு அவரை பிடிச்சு இருக்கு என்கிறார்.
அவர் நல்லவரு அக்கா. நான் கல்யாணம் செஞ்சிக்கிற முடிவில் இருக்கேன் என்கிறார். மனோஜ் மற்றும் அவர் பார்க் நண்பர் பேசிக்கொண்டு இருக்க எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இப்படித்தான் பொண்டாட்டியோட பேசலை. அவர் ஆறு மாதம் கழித்து வேற செட்டப் வச்சிக்கிட்டா என்றார். இதை கேட்டு ஷாக்கான மனோஜ் யோசிக்கிறார்.