ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீது இந்திய மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெசவாளர் மற்றும் வணிகர் விஜய் பவசிங் எனும் நபர், இந்த வீரர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு தனிப்பட்ட உருவாக்கத்தை செய்துள்ளார்.
இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் வகையில், பிரம்மோஸ், ரஃபேல், எஸ்-400, ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் படங்களை அடங்கிய சிறப்பு பனாரசி சாட்டின் புடவை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 6.5 மீட்டர் நீளமுள்ள அந்த புடவையின் எட்ஜில் “ஆபரேஷன் சிந்தூர்” என புடவை முழுவதும் தையல் செய்யப்பட்டு உள்ளது. புடவையின் மையத்தில் ரஃபேல், எஸ்-400, பிரம்மோஸ், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் இந்திய வீரசேனையின் காட்சிகள் மிக நுட்பமான கலை வடிவத்தில் உள்ளன.
View this post on Instagram
அந்த புடவை கேப்டன் சோஃபியா குரைஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு வீராங்கனைகளுக்கு நேரிலேயே வழங்கப்பட உள்ளதாக வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த புடவை வடிவமைக்கப்பட்டதிலிருந்து, பல நகரங்களில் இருந்து அதிகமான கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கூறப்படும் நிலையில், இது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கான ஒரு நினைவுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, விஜய் பவசிங், அயோத்தியாவில் ஸ்ரீ ராமலாலா விருத்தி விழாவிற்காகவும் ஒரு சிறப்பு பனாரசி புடவை வடிவமைத்துள்ளார், அதற்காகவும் பாராட்டு பெற்றுள்ளார். இவர் தயாரித்த சிறப்பு சாஃபா (தலைப்பட்டை) ஒன்றை பிரதமருக்கே நேரில் வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி, இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், மக்களது பாராட்டையும் புகழ்ந்து போற்றும் ஒரு சிறப்பு காணிக்கை என பலராலும் பாராட்டப்படுகிறது.