அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் Gram Chikitsalay’, அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையான அணுகுமுறையால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சாயத்’, ‘பெர்மனெண்ட் ரூம்மேட்ஸ்’ போன்ற பிரபல வெப் சீரிஸ்களை உருவாக்கிய தீபக் குமார் மிஸ்ரா இதை இயக்கியுள்ளார்.
இந்த சீரிஸ் ‘டாக்டர் பிரபாத்’ எனும் கிராம சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவரை மையமாக கொண்டு கதை நகர்கிறது. இதில் அமோல் பராஷர், வினய் பாதக், ஆனந்தேஸ்வர் துவிவேதி, ஆகாஷ் மகிஜா மற்றும் கரீமா விக்ராந்த் சிங் நடித்துள்ளனர்.
இதில் அமோல் பராஷர் தனது கேரக்டரில் கலக்கியுள்ளார். ஆனால் நடிகராக மாறும் முன்பு, அவர் ஒரு மேனேஜ்மெண்ட் கன்சல்டிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனம்த்தி பணியாற்றி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் வேலையை ராஜினாமா செய்தார்.
2009ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘ராக்கெட் சிங்: ஸேல்ஸ்மேன் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், ‘Tripling’ வெப் சீரிஸில் ‘சித்த்வன் ஷர்மா’ என்ற கேரக்டர் மூலம் பிரபலமானார். பின்னர் ‘சர்தார் உதம்’ படத்தில் பகவத் சிங்காக நடித்து பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில் அமோல், ‘Dolly Kitty Aur Woh Chamakte Sitare’ திரைப்படத்தில் நடித்த கங்கனா சென் சர்மாவுடன் தற்போது காதலில் இருக்கிறார் என கூறப்படுகிறது. கங்கனா, நடிகர் ரன்வீர் ஷோரியை திருமணம் செய்திருந்தார், அவருக்கு ஹாரூன் என்ற மகனும் உள்ளார். இருவருக்கும் சுமார் 7 வயது வித்தியாசம் உள்ளது. சமீபத்தில் ‘கிராம சிகிச்சாலயம்’ படத்தின் திரையீட்டில் இருவரும் சேர்ந்து வந்தது தான் அவர்களுடைய உறவைப்பற்றிய கிசுகிசுக்களை உறுதி செய்தது.
ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்த அமோலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயம் அவருடைய காதல் வெற்றி பெறும் என திரையுலகினர் கூறி வருகின்றனர்.