ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.
2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்வாசிகா தான் ஒரு சில விஷயங்களை நடக்க வேண்டும் என்று விரும்புவதாக பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், லப்பர் பந்து படம் என் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல பெரிய இயக்குனர்கள் நடிகர்கள் கூட என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டினர். அதேபோல நான் ஒரு சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்று மேனிஃபாஸ்ட் செய்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்று பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் இந்த படத்தை பார்த்து பாராட்டி இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் அதிலும் ஸ்வாசிகா நடிக்க வேண்டும் என்று கூற மாட்டாரா என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஸ்வாசிகா.