பணத்துக்காக இந்த விஷயத்தை நான் பண்றதில்லை… மனம் திறந்த விஜய் சேதுபதி…
Tamil Minutes May 24, 2025 05:48 AM

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பீட்சா, தர்மதுரை, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளை தேர்ந்தெடுத்து வயசானவர் இளமை என எல்லா கதாபாத்திரங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிகாட்டி குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.

நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததன் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்விஜய் சேதிபதி. விஜய்க்கு எதிராக மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. அதற்கு அடுத்ததாக சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்தார். எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் மிகவும் யதார்த்தமாக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்துவரும் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சில விஷயத்தை பணத்துக்காக செய்வதில்லை என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி கூறியது என்னவென்றால் கடைசி விவசாயி படம் பெரிதாக வணீகரீதியாக போகவில்லை. ஆனாலும் அந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படுவேன். அப்படி பெருமைப்படக்கூடிய படங்களும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பணத்துக்காக மட்டுமே படம் நடிப்பவன் நான் இல்லை என்று பகிர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.