நெகிழ்ச்சி வீடியோ... தாய்ப்பாசம்... புலியுடன் சண்டையிட்டு குட்டியை மீட்ட கரடி!
Dinamaalai May 24, 2025 03:48 AM

 

தினமும் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  விலங்குகளின் வீடியோக்கள்  மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்த மாதிரியான  ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.
அதன்படி  ஆந்திர மாநிலத்தில்  நல்லமலா மலைகளில் வனப்பகுதி இருக்கிறது. இங்கு ஒரு கரடி புதிதாக குட்டியை ஈன்றுள்ளது. இந்நிலையில் அந்த குட்டியை ஒரு புலி வெளியே தூக்கி சென்றது. இதனை பார்த்த தாய் கரடி தன்னுடைய குட்டியை காப்பாற்றுவதற்காக நேருக்கு நேர்  புலியுடன் சண்டை போட்டது.


இந்த சம்பவத்தை வனப்பகுதியில் ரோந்து சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.  இந்த வீடியோவை  சமூக வலைதளத்தில் பதிவிட்டு அது வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் தாய்ப்பாசத்தை மிஞ்சிய வீரம் உண்டோ ... மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு தாய்ப்பாசம் என பதிவிட்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.