கூட்டு பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 குற்றவாளிகள்… சாலையில் பட்டாசுகள் வெடித்து, உற்சாக வரவேற்பு… கடும் எதிர்ப்பைக் கிளப்பிய வீடியோ…!!
SeithiSolai Tamil May 24, 2025 03:48 AM

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரியில் கடந்த ஜனவரி 2024 இல் நடந்த கூத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு ஜாமின் வழங்க ப்பட்ட பின்னர் வாளிகளை உற்சாகத்துடன் வரவேற்ற சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆப்தாப் சந்தனகட்டி, மதர் சாஹிப் மண்டக்கி, சமிவுல்லா லலனவர், முகம்மது சதிக் அகாசிமானி, ஷொயிப் முல்லா, தௌசிஃப் சோட்டி மற்றும் ரியாஸ் சாவிகேரி ஆகியோர். இவர்கள் ஹாவேரி துணை சிறையில் இருந்து அக்கி அலூர் நகருக்கு 5 வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர்.

அப்போது சுமார் 20 பேர் கொண்ட குழு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்து, சாலையில் பட்டாசுகள் வெடித்து, வெற்றிக் கோஷங்களை எழுப்பினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சி மற்றும் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணத் தவறியதால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள சில வீடியோக்கள், கடத்தல் மற்றும் தாக்குதல் போன்றவை உண்மையென காட்டுவதாக கூறப்படுகிறது.

அதில் சிலர் இதற்கு முன்பு பல குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காவல்துறையினர் அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.குற்றவாளிகளை பொது இடத்தில் கொண்டாடியதற்காக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.