“3 வருஷமா போகாமல் இப்ப மட்டும் ஏன் போகணும்”… 2011-ல் Power Cut மாதிரி 2026-ல்… திமுகவுக்கு இது நடப்பது உறுதி… அடுத்து இபிஎஸ் தான்… ஆர்பி உதயகுமார் அதிரடி…!!!!
SeithiSolai Tamil May 24, 2025 04:48 PM

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதாவது தஞ்சையில் நேற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது எனக்கூறி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது இந்த வருடம் மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார்.

அவர் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக தான் டெல்லிக்கு சென்றுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர் மின்வெட்டு பிரச்சனையால் திமுக ஆட்சியை இழந்தது.

தற்போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் ஆட்சியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் அதிமுக பக்கம் தான் இருக்கின்றனர். மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக அதிமுக ஆட்சியமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.