துணை பொது செயலாளர் பதவி? தவெக ஆலோசகர் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் ராஜினாமா!
Dinamaalai May 24, 2025 04:48 PM

தவெக வில்  இதுவரை  ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண்ராஜ் செயல்பட்டு வந்தார்.

தற்போது தனது வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை மத்திய நிதியமைச்சகம் ஏற்று கொண்டது. இந்நிலையில், அரசு பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜூக்கு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, தற்போது பொதுச் செயலாளராக உள்ள ஆனந்த்க்கு செயல் தலைவர் பதவியும் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  அருண்ராஜ் பாஜக – அதிமுக கூட்டணிக்கு தவெகவை இழுப்பதற்காக முயற்சி மேற்கொள்ளவும், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடவும் தனது பதவியை ராஜினாமா செய்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.