IPL 2025: பேட் கம்மின்ஸ், ரஜத் படிதாருக்கு அபராதம்… எவ்வளவு… ஏன் தெரியுமா?..!!
SeithiSolai Tamil May 25, 2025 07:48 PM

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இரு அணிகளும் மெதுவாக பந்து வீசியதாக இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன்படி ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்சுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெங்களூர் கேப்டன் ரஜத் படிதாருக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டார். ஆனால் அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனான படிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கும் தலா 6 லட்சம் ரூபாய் அல்லது ஆட்டத்திற்கான ஊதியத்தில் 25 சதவீதம் இதில் எந்த தொகை மிகக் குறைவோ, அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.