இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த அறிவிப்பு மிகுந்த அளவில் எழுந்த நிலையில் நேற்று அறிவிப்பு வெளியானது.
அதன்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கருண் நாயர், அபிமன்யூ ஈஸ்வரன், ஜடேஜா, நிதீஷ்குமார் ரெட்டி, பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், குல்திவ் யாதவ், சாய் கிஷோர், ஆர்ஸ்தீப்சிங், ஷர்துல் தாகூர், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த முறை டெஸ்ட் போட்டியில் ஏராளமான இளம் வீரர்களை பிசிசிஐ நியமித்துள்ள நிலையில், சர்ப்ராஸ் கான், ஹர்சித் ராணா, முகமது சமி மற்றும் ஸ்ரேயயஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடும் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கடந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி கோப்பையை வெல்ல மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டார்.
இதனால் அவருக்கு அந்த மாதத்திற்கான சிறந்த விருது வழங்கிய ஐசிசி கௌரவித்திருந்தது. இதனால் அவர் அணியில் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, ஸ்ரேயஸ் ஐயர் கடந்த சில காலங்களாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் கிடையாது என்றார்.
மேலும் முகமது சமி உடல் தகுதி காரணமாக அணியில் எடுக்கப்படவில்லை என்றார். அதாவது அவருக்கு உடல்நல பிரச்சனை காரணமாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக விளையாட முடியாது என்பதால் அவரை அணியில் எடுக்க முடியவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.