“8 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு”… என்னுடைய 16 வருஷ உழைப்புக்கு கிடைத்த வெற்றி… கருண் நாயர் உருக்கம்…!!!
SeithiSolai Tamil May 25, 2025 07:48 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடர் 2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாகும். இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக 25 வயதான ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக உள்ளார்.

இந்த தொடர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணியின் புதிய தலைமையின் தொடக்கமாகும். இந்நிலையில் இந்த டெஸ்ட் அணியில் விளையாடுவதற்காக கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கருண் நாயர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தது தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது “அழைப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நெருங்கிய நபர்களிடமிருந்து வாழ்த்து செய்தி வந்தது. மேலும் கடந்த 16 மாதங்களாக நான் கடுமையாக பேட்டிங் செய்து உழைத்து வந்த நிலையில், தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.