இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்கள் கண்டிப்பாக வரி செலுத்துவது அவசியம். உரிய நேரத்தில் வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் செலுத்த நேரிடும்.
இந்நிலையில் ஏற்கனவே வருமான வரி செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் கால அவகாசமானது நீடிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உரிய நேரத்தில் தாக்கல் செய்யாவிடில் கண்டிப்பாக அதற்குரிய வட்டி மற்றும் அபராதத்தை செலுத்த நேரிடும். நிலுவையில் உள்ள வரிக்கு மாதந்தோறும் ஒரு சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.