SeithiSolai Tamil May 28, 2025 12:48 AM

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங் கூறிய ஒரு கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது “குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் மெஷின் விரைவில் நிறுவப்படும்” என்ற அவரது பேச்சு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. இதன் வீடியோவை செய்தியாளர் நரேந்திர பிரதாப் X இல் பகிர்ந்துள்ளார்.

அதில் மீரட் பகுதியில் வடிகால்களில் குப்பைகள் தடை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, அதை முழுமையாக அகற்றும் திட்டம் ஒன்றை அரசு முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தரம்பால் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, “குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதற்கான மெஷின் தற்போது தயாராகி வருகிறது. சில சிக்கல்களால் மெஷின் தயாரிப்பு தாமதமாகியுள்ளது. ஆனால் உருவானதும், மீரட்டில் அந்த இயந்திரம் நிறுவப்படும்” என அவர் கூறியுள்ளார்.

ஈயிலிருந்து தங்கம் உருவாக்கியதாக சில விஞ்ஞானிகள் முன்னர் கூறியதாக அமைச்சர் குறிப்பிட, இது வேதியியல் உலகில் “ரசவாதம்” (Alchemy) எனப்படும் ஒரு பண்டைய யோசனையை நினைவுபடுத்துகிறது. ஆனால் அமைச்சர் கூறும் மெஷின் – அது வேதியியல் ரீதியானதா? சுற்றுச்சூழல் சீரமைப்புக்கானதா? என்ற கேள்விகள் எழுகின்றன. மாநில அரசுக்கு மொத்தக் குப்பை மேலாண்மையைச் சமாளிக்க ஒரு திட்டமா அல்லது உண்மையாகவே தங்கம் உருவாகுமா? என்பதும் பொதுமக்களில் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.

அமைச்சரின் இந்த பேச்சு, எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. “தங்கம் கிடைக்கும்னா மக்கள் சும்மா இருக்கமாட்டாங்க!” என பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இது போன்ற பொது அறிவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளிக்கவேண்டியது அரசின் பொறுப்பு என வலியுறுத்தப்படுகின்றது. “குப்பை–தங்கம் மெஷின்” நடைமுறையில் வருமா? அல்லது இது வெறும் அரசியல் உத்தியாகவே நிலைவிடுமா என்பது காலமே பதிலளிக்க வேண்டிய விஷயம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.