Dinamaalai May 28, 2025 03:48 AM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில், ரொட்டி தயார் செய்யும்  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த சமயத்தில்  ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர், தட்டில் ரொட்டிகளை வைக்கும்போது, எச்சில் துப்பி வைக்கிறார். 

இச்சம்பவம் குறித்து  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சோயிப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை  போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் நம்பிக்கையையும் உணவுப் பாதுகாப்பையும் மிக மோசமாக பாதிக்கக்கூடியவை என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம், இந்தியாவின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்ந்து வரும் மனிதாபிமானமற்ற செயல்களின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. உணவிலும் பானங்களிலும் எச்சில் துப்புதல், அல்லது பிற அருவருப்பான செயல்கள் நடைபெறுவது, பொதுமக்கள் மட்டுமல்லாது, சமூக அமைப்புகளும் இத்தகைய செயல்களை கண்டித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தி வருகின்றனர்.  குற்றவாளிகளை கைது செய்வது மட்டும் போதாது, உணவுத் தயாரிப்பு மையங்களில் தெளிவான கண்காணிப்பு, தண்டனை, மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.