தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.
2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் சிம்பு பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் சிம்பு புதிய படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும் அந்த படத்தில் அவருடன் இணைந்து ஜாக்கி சான் மற்றும் மோகன்லால் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுதான் தற்போது சினிமா வட்டாரத்தில் பேச்சுப் பொருளாக மாறி இருக்கிறது. சிம்பு பழைய பாமிற்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.