ஜனநாயகன் படக்குழு ஏற்பாடு செய்ய இருந்த விழாவை வேண்டாம் எனக்கூறிய விஜய்… காரணம் என்னனு தெரிஞ்சா வாயடைச்சு போயிடுவீங்க…
Tamil Minutes May 30, 2025 05:48 AM

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விஜயை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், ஜனநாயகன் படம் தான் விஜய் அவர்களுக்கு இறுதி படமாக இருக்கும். அதற்குப் பிறகு அரசியல் பணிகளை செய்ய தொடங்குவார் விஜய். அதனால் ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் மிகப்பெரிய ஃபேர்வெல் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்ய ஜனநாயகன் படக்குழு திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் விஜய் அந்த பார்ட்டி எதுவும் வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். அதற்கு அவர் காரணமாக கூறியது என்னவென்றால், அந்த இறுதி நாள் ஷூட்டிங் எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கும் அதனால் பார்ட்டி வேண்டாம் என்று கூறியிருக்கிறார் விஜய்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.