ஒரு உயிரே போய்டுச்சு! ரோடு ஷோ நடத்த கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? CM ஸ்டாலினுக்கு அதிமுக கண்டனம்!
Seithipunal Tamil June 01, 2025 05:48 AM

அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மதுரை பந்தல்குடி கால்வாயில் சாக்கடை அடைப்பை எடுக்கச் சென்ற ராஜா என்பவர் உயிரிழந்தபோது, போட்டோ ஷுட் மட்டும் எடுத்து, தடுப்பு சுவர் அமைப்பதாக வாயால் வாக்குறுதி அளித்தீர்களே திமுக. இன்று வரை ஒரு செங்கலாவது வைத்தீர்களா?

இந்த பொய்யை மறைக்க தானே திரை வைத்து மறைக்கிறீர்கள்?

பொதுக்குழு மெனுவிலும், Red Giant மூவிஸ் தயாரித்து, திமுகவின் இணை கொத்தடிமை உடன் தயாரித்து நடித்த ThugLife படம் ரிலீஸ் ஆகும் நேரம் பார்த்து கேளிக்கை வரியைக் குறைப்பதிலும் காட்டிய முனைப்பை, திட்டங்களை நிறைவேற்றுவதில் என்றைக்காவது காட்டினீர்களா?

மக்களின் தக்க பதிலடியை 2026ல் திரைமறைவு கொள்ளை திமுக நிச்சயம் பார்க்க தான் போகிறது! கிரிகாலன் Roadshow

ஒரு உயிரிழப்பு நடந்தும் திருந்தாத திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு, பந்தக்குடி கால்வாய் சாலையில் கிரிகாலன் Roadshow நடத்த கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா?

திரை போட்டு மறைந்தால், உங்கள் அலங்கோல ஆட்சி புனிதமாகி விடுமா?

Benz வேனில் உலா வரும் உங்களுக்கு தமிழக மக்களின் வலியோ, வேதனையோ எப்படி புரியும் முக ஸ்டாலின்?

மன்னராட்சி மனநிலையில் உள்ள பொம்மை முதல்வருக்கும், திரைமறைவு கொள்ளை திமுக- வுக்கும் மக்கள் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்த்துள்ளது.


 
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.