Housefull 5: 'ஒரு படத்துக்கு ரெண்டு க்ளைமேக்ஸ்!' - முதல் முறையாக இரண்டு வெர்ஷன்களுடன் பாலிவுட் படம்!
Vikatan June 03, 2025 03:48 AM

'ஹவுஸ்ஃபுல்' என்கிற பிரபலமான பாலிவுட் பட பிரான்சைஸின் 5-வது பாகமான 'ஹவுஸ்ஃபுல் 5' ஜூன் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த பிரான்சைஸின் முதல் பாகம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது.

Housefull - 2010 Film

ஒவ்வொரு பாகங்களுக்கும் கிடைத்த நல்லதொரு வரவேற்பைத் தொடர்ந்து இந்த பிரான்சைஸ் ஐந்தாவது பாகம் வரை நீண்டிருக்கிறது.

அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தீஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்திருக்கும் இந்த ஐந்தாவது பாகத்தை பாலிவுட் இயக்குநர் தருண் மன்ஷுகானி இயக்கியிருக்கிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியை இப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் 6-ம் தேதி இரண்டு வெர்ஷன்களில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இதுவரை இரண்டு இன்டர்வெல் கொண்ட படங்கள் திரையரங்குகளில் வெளியான கதைகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், இத்திரைப்படத்திற்கு இரண்டு வித்தியாசமான வெர்ஷன்களுடன் திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறார்கள்.

Housefull 5 crew

'ஹவுஸ்ஃபுல் 5 ஏ', 'ஹவுஸ்ஃபுல் 5 பி' என வெவ்வேறு க்ளைமேக்ஸ் முடிவுகளைக் கொண்ட வெர்ஷன்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

இதில் எந்தவொரு வெர்ஷனை மக்கள் பார்க்க விரும்புகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் டிக்கெட் புக் செய்து கொள்ளும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

சில திரையரங்குகளில் இப்படத்தின் ஏதேனும் ஒரு வெர்ஷன் திரையிடப்படுகிறது. சில திரையரங்குகளில் இரண்டு வெர்ஷன்களுமே வெவ்வேறு நேரங்களில் திரையிடப்படுகின்றன.

இந்திய சினிமா வரலாற்றில் இப்படியான ஒரு புதிய முயற்சியைக் கையாண்டு பலரையும் ஆச்சரிப்படுத்தியிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா.

நீங்கள் எந்த வெர்ஷனைத் தேர்ந்தெடுக்கப் போறீங்க ? கமென்ட்ல் சொல்லுங்க!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.