பொதுவாக கருப்பு எள் நிறைய மருத்துவ குணம் கொண்டது .அதனால் நாம் இப்பதிவில் கருப்பு எள்ளின் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.இந்த கருப்பு எள் மாதவிடாய் நின்ற பெண்களின் எலும்புகளை வலுவாக்க உதவும் .
2.இந்த எள்ளில் இதயத்தினை பாதுகாக்கும் அளவிற்கு இரும்பு சத்து நிறைந்துள்ளது .
3.மேலும் இதில் முடி கொட்டுதல் ,இளநரை போன்ற முடி சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும் ,
4.மேலும் இதில் உள்ள கால்சியம் சத்து எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் வராமல் பாதுகாக்கும் ,
5.கருப்பு எள்ளை உணவில் சேர்த்துகொள்ளும்போது பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றகேன்சர் நோய்களை தடுக்கும்
6.சிலருக்கு குடலில் நச்சு இருக்கும் .அதனால் கருப்பு எள் குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி சுத்தமாக வைக்க உதவும்.
7.சிலருக்கு பிபி இருக்கும் .எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும்.
8.மேலும் கருப்பு எள்ளில் , ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றலும் உள்ளது .