மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிகரிப்பு..!
Newstm Tamil June 04, 2025 04:48 PM

கடந்த ஜூன் 02ம் தேதி திங்கள் கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 8,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 71,600 ரூபாய்க்கு விற்பனையானது.

அதே நாளில் மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 9,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 72,480 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன் 04) சென்னையில் இன்று (ஜூன் 04) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.