வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... சாட் ஜிபிடி மூலம் போடாத சாலையை போட்டது போல் காட்டிய ரோடு காண்ட்ராக்டர்!
Dinamaalai June 05, 2025 11:48 PM


சினிமாவில் வடிவேலு கிணறை காணோம் என கம்ப்ளைண்ட் கொடுத்தது பெரும் நகைச்சுவையாக ரசிக்கப்பட்டது. அதே போல் தற்போது ரோடு காண்ட்ராக்டர் ஒருவர் சாலை போடப்பட்டதாக கணக்கு காட்டியிருக்கிறார். இதற்கான புகைப்படத்தை சாட் ஜிபிடி மூலம் உருவாக்கியுள்ளார்.  இந்த வீடியோவில், ஒரு பழைய, சீரமைக்கப்படாத கிராமப்புற சாலையின் புகைப்படம் எடுக்கப்படுகின்றது.
 


 சாட்ஜிபிடியில் “இந்த சாலையை புதியதாக மாற்றி காட்டவும்” என்ற புகைப்பட திருத்தப் ப்ராம்ப்ட் கொடுக்கப்பட, அது மிகத் தத்ரூபமாக புதிய கான்கிரீட் சாலையாக மாற்றி புகைப்படத்தை வழங்கிவிட்டது.  அந்த புகைப்படத்தை, அந்த காண்ட்ராக்டர் தனது பொறியாளருக்கு அனுப்புகிறார். புகைப்படத்தை பார்த்த பொறியாளர், நிஜமாகவே சாலை போடப்பட்டதுபோல என்று நம்பி, ‘தம்ஸ்அப்’ காட்டி ஒப்புதல் வழங்குகிறார்.
இதன் மூலம் சாலை போடாமல், பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதை உறுதி செய்யலாம்.  இதனையடுத்து, இந்த வீடியோ உண்மையானதா அல்லது யாரோ கற்பனைக்காக உருவாக்கிய காட்சியா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. இந்த வீடியோவை ‘naughtyworld’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தினால், அதனால் ஏற்படக்கூடிய மோசடிகள் குறித்த  அச்சம் தற்போது சமூகத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.