“லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட 19 வயது பெண்….” டஸ்டிங் ஸ்பிரேவை வாயில் அடித்து…. அடுத்த நொடியே நடந்த சோகம்…. பகீர் சம்பவம்….!!
SeithiSolai Tamil June 09, 2025 12:48 AM

சோசியல் மீடியாவில் லைக்ஸ் வாங்குவதற்காக வாலிபர்களும் இளம் பெண்களும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ரென்னா. 19 வயதுடைய ரென்னா சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கணினியின் கீபோர்டு உள்ளிட்ட பாகங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்பிரேவை வாயில் அடித்துக் கொண்டு சுவாசிக்கும் சவால் எடுத்துள்ளார். ஆன்லைனில் ஸ்பிரே ஆர்டர் செய்து வாயில் ஸ்பிரே செய்துள்ளார்.

சில நிமிடங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மானடைப்பு ஏற்பட்டு ரென்னா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.