உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமான செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ் அப் ச்யலி. பயனர்களைத் தக்க வைக்க, மெட்டா நிறுவனம் அவ்வப்போது வாட்ஸ் -அப் அப்டேட் செய்து, புதிய புதிய அம்சங்களையும் புகுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் முக்கிய மாற்றம் ஒன்றை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது.
தற்போது வாட்ஸ் அப் செயலியில் படங்கள், 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை ஸ்டேட்ஸ் வைக்கு வசதி உள்ளது. அதிகளவிலான பயனர்கள் தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்களை ஒளிபரப்ப வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் வருவதைப் போல இனி வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்கள் தோன்றும். தனிப்பட்ட சாட்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.