கர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி சவாரிகளை ரேபிடோ நிறுவனம் வழங்கி வந்தது.ஒரு கட்டத்தில் பிரபலமான ரேபிடோ, பாதுகாப்பு மற்றும் உரிமம் தொடர்பான கவலைகள் காரணமாக ஒழுங்குமுறை விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனை தொடர்ந்து, பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதும் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்றுடன் (ஜூன் 16) முடிவுக்கு வந்தது. இந்நிலையில், Uber நிறுவனம் ‘Moto’ என்ற பைக் டாக்ஸி சேவையை ‘Moto Courier’ என மாற்றியுள்ளது. அதேபோல், Rapido நிறுவனம் ‘Bike’ என்பதை ‘Bike Parcel’ என மாற்றியுள்ளது.
இந்தப் பெயரின் மூலம் பார்சல்கள் பைக்கில் அனுப்பப்படுவது என்றாலும், வழக்கம்போல் பைக் டாக்ஸியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, ‘இனி நம்மை நாமே பார்சல் செய்து அனுப்பிக்கொள்ளலாம் போல’ என பெங்களூரு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த மறுபெயரிடப்பட்ட ரேபிடோ – ஊபரின் சேவைகள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றனவா அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பின் நோக்கத்தை மீறுகின்றனவா என்பது குறித்த விளக்கங்கள் இனி தான் தெரியும்.