8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?
Newstm Tamil July 01, 2025 02:48 PM

அரசுத் தேர்வுகள் இயக்ககம் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (8th Standard Exams) எழுதும் தனித்தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

வரும் ஆகஸ்ட் மாதம் தனித் தேர்வர்களுக்கான  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் 12 1/2 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இத்தேர்விற்கு வரும் ஜூலை 10ஆம் தேதி ஜூலை 17ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.   

இந்த தேர்வின் விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் 195 ரூபாயை பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவில்லை என்றால் ஜூலை 18 மற்றும் 19 தேதிகளில் இந்த தேர்வுக் கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகயான 500 ரூபாயை கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.   

முதல்முறை விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மற்றும் மாற்றுச் சான்றிதழ் நகல் / பள்ளி பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றிணை இணைத்து சமர்பிக்க வேண்டும்.   

ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியடைந்த மாணவ்ரகள், தங்கள் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்/சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் 42 ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்பிக்க வேண்டும்.   

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தேர்விற்கான விரிவிான தகவல்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.   

ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதிவரை தொடர்ந்து 5 நாள்கள் தேர்வுகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற தேர்வுகள் முறையே திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறுகிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.