தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன் 30 ம் தேதி நேற்று பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. முதற்கட்டமாக, வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் 10 பேர் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காலை 9:20 மணிக்கு தொழிற்சாலையில் உள்ள ஒரு ஸ்ப்ரே ட்ரையர் அமைப்பில் அழுத்தம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நிகழ்ந்தது. இந்த வெடிப்பு3 மாடிக் கட்டிடத்தை இடித்து, பெரும் தீயை உருவாக்கியது. சுமார் 150 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, 90 பேர் வெடிப்பு நடந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிப்பின் தாக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், சில தொழிலாளர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். தீயை அணைக்க 11 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் NDRF, SDRF படைகள் பயன்படுத்தப்பட்டன. பலியானவர்களில் பெரும்பாலோர் பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள். காயமடைந்த 35 பேரில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களில் பலருக்கு சுவாசப் பிரச்சனைகள் இருப்பதாக தெலங்கானா சுகாதார அமைச்சர் தாமோதர ராஜா நரசிம்ஹா தெரிவித்தார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த விபத்து, தொழிற்சாலையில் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர வெடிப்பு ஒரு உலர்த்தி அமைப்பில் ஏற்பட்டது, இது ஒரு ரியாக்டர் வெடிப்பு இல்லை,” என அமைச்சர் விவேக் வெங்கட்சாமி தெரிவித்துள்ளார். தொழிற்சாலை மேலாளரும் உயிரிழந்ததால், தொழிலாளர்களின் விவரங்கள் அழிந்தன. இந்தப் பேரழிவு, தெலங்கானாவில் நிகழ்ந்த மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது